அமெரிக்கத் தமிழ் வானொலி
நீங்கள் விரும்பும் பாட்டு, நீங்கள் விரும்பும் வானொலியில்

About Us

அமெரிக்கத் தமிழ் வானொலி

“தமிழ் எங்கள் மூச்சு”

பூமிப்பந்தில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. அதுவும் குறிப்பாக வட அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அறிவிலும், ஆற்றலிலும், சிறந்து செல்வச் செழிப்போடு வாழ்கின்றனர். இவ்வாறு சாதனை படைத்து வாழும் தமிழர்களின் மத்தியில், தமிழர்களுக்கென்று ஒரு ஊடகம் இல்லாத நிலையில் அக்டோபர் 2016-ல் எளிய முறையில் "தமிழ் எங்கள் மூச்சு" என்ற முழக்கத்துடன் அமெரிக்கத் தமிழ் வானொலி தொடங்கப்பட்டது.
     

"காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்"

என்ற பாரதியின் கனவு மெய்ப்பட அமெரிக்கத் தமிழ் வானொலி, அமெரிக்க மண்ணில் தடம் பதித்ததோடு, உலகத் தமிழர்கள் அனைவரும் கேட்டு மகிழும் வகையில் உள்ளது மிகவும் பெருமைக்குரியது.
     
வானொலிக்கே உரித்தான வரையறைகளுக்கு உட்பட்டு, ஆரம்ப காலத்தில் தமிழ் நேயர்களின் நெஞ்சம் கவரும் வண்ணம், 80-களில் சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட பாடல்களுடன் தொடங்கி இன்றைய புதிய பாடல்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பி கொண்டிருக்கிறது.
     
கால ஓட்டத்தில், பல சிகரங்களை அடைந்து, நேயர் வட்டம் பெருகி, நேயர் விருப்பத்திற்கிணங்க, உலக நடப்பு செய்திகள், சிறுகதை தொகுப்பு, அறிவோம் அறிஞர்களை, சாதனைத் தமிழர்களுடன் உரையாடல், அமெரிக்கா மற்றும் தமிழகம் குறித்த சமகால அரசியல், தேர்தல் நிலவரம், விளையாட்டு, மருத்துவம், குடியுரிமை பிரச்சனை குறித்த உரையாடல்கள், இசைத்தமிழ் நிகழ்ச்சி, என்று ஒவ்வொன்றாக தடம் பதித்து, வான் எல்லையில் தனக்கு நிகர் தானே என்ற அளவில், வளர் நடை போடுகின்றது, அமெரிக்கத் தமிழ் வானொலி.